சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க பிரான்ஸ் தூதரகத்துடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சர்வதேச மொழி பயிற்றுவிக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் மட்டுமே சர்வதேச மொழிகள் பயிற்றுவிக்கப்படும் நிலையில் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களில் 4 பேட்ச் மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கவும், படிப்படியாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.