சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்த நிலையில் இந்த மாதம் மேலும் ரூ.38 உயர்ந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-ஆக நீடிக்கிறது.