சென்னை: தமிழக தலைநகரமான சென்னை மாநகரை அமைக்க இடம் வாங்கப்பட்ட தினம் மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது. சென்னை மாநகரம் சாதி, மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் என அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். சென்னையில் பிறந்த பல சாதனையாளர்கள் உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் பாஜக தெரிவித்துள்ளது. பல நூற்றாண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்க, மேலும் பல சாதனையாளர்களை உருவாக்க அண்ணாமலை வாழ்த்துகள் தெரிவித்தார்.