சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சல் போட்டு பயணிகளுக்கு கல்லூரி மாணவர்கள் இடையூறு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலைய 16-வது நடைமேடையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூச்சல் போட்டு இடையூறு செய்ததாக புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் 30 பேரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நீதிமன்றம் அலைய வேண்டியிருக்கும் என ரயில்வே எஸ்.பி. எச்சரித்து அனுப்பி வைத்தார்.