செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் ஆடு மேய்த்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மதுபோதையில் காரை ஓட்டிய 2 இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
0