Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சென்னையில் கொலை முயற்சி வழக்கில் அண்ணன் பெயரை பயன்படுத்தி ஜாமினில் வந்தவர் தலைமறைவு..!!

சென்னை: சென்னையில் கொலை முயற்சி வழக்கில் அண்ணன் பெயரில் சிறைக்கு சென்று பிறகு ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவாகியுள்ளார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பழனி என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகியுள்ளார். போலீசார் கைது செய்தபோது தனது பெயர் பன்னீர்செல்வம் என்று அவரது அண்ணன் பெயரை கூறியுள்ளார்.

போலீசார் பன்னீர்செல்வம் என்ற பெயரில் வழக்கு பதிவுசெய்த நிலையில் பழனி ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகியுள்ளார். விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் பன்னீர்செல்வத்துக்கு போலீசார் பிடிவாரண்ட் பிறப்பித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தனது தம்பி பழனி, தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி தலைமறைவாகிவிட்டதாக பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்தார். பன்னீர்செல்வம் தகவலை அடுத்து அவரது மோசடி தம்பி பழனி மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்.