சென்னை: சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடக்கத்தில் பேசிய நிதிதுறை செயலாளர், ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், சிறப்பு முகாமல்கள் அமைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில், கூட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை அளிக்கபடும் என்ற வாக்குறுதி அளிக்கபட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில், செப்.5-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தபடும் என தெரிவித்திருந்தார். மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்தும், யார் யாருக்கெல்லாம் இந்த தொகையை வழங்கலாம் என்பது குறித்தெல்லாம் அன்மையில் ஆலோசனை நடைபெற்றது.
இதற்காக சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கபட்டுள்ளார். சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1 கோடி மகளிருக்கு உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தகுதியான பயனாளிகள் விவரங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. பள்ளிகள், சமுதாய நலக் கூடம், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், கழிவறை, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள. தன்னார்வலர்கள் மூலமாக பயோமெட்ரிக் மூலம் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.