சென்னை: இஸ்ரேல் போர் தாக்கத்தால் தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், சற்று குறைவதுமாகவும் இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,400-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த ஜெட் வேக விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,400-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனை ஆகிறது.