சென்னை: திமுக நிர்வாகிகளுடன் 1 டு 1 சந்திப்பு நடத்தப்படும் என மதுரையில் நடந்த பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலையத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை உடன்பிறப்பே வா என்ற பெயரில் 1 டு 1 சந்திப்பு நடத்திவருகிறார். முதல்நாள், விழுப்புரம், உசிலம்பட்டி, சிதம்பரம் தொகுதி நிருவாகிகளை சந்தித்து பேசினார்.
இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் 27 சட்டபேரவை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். இன்று மணப்பாறை, பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை தற்போது சென்னை அண்ணா அறிவாலையத்தில் முதல்வர் சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பின் போது தேர்தல் பணிகளைல் முரண்பாடு களைந்து ஒற்றுமையுடன் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் வெற்றி பெறும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 234 தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளை முதல்வர் சந்திக்கஉள்ளது குறிப்பிடத்தக்கது.