சென்னை: சென்னையில் 17 வழித்தடங்களில் கொண்டுவரப்பட்ட 2,148 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. சென்னை பட்டினப்பாக்கத்தில் இதுவரை 548 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. காசிமேடு, திருவெற்றியூர் ஆகிய கடற்கரையில் 106 சிலைகள் கரைத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் 613 சிலைகள் கரைத்துள்ளனர். ராட்சத கிறேன் மற்றும் மீனவர்கள் உதவியுடன் சிலைகள் கரைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.