Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

செங்கம் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு கவசம் செய்ய ரூ.16 லட்சம் மதிப்பில் வெள்ளி

*எம்எல்ஏ வழங்கினார்

செங்கம் : செங்கம் நகரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணி செய்து கடந்த 9ம் தேதி குடமுழுக்கு நடந்தது.இந்நிலையில், ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி மூலவர் சிலைகள் வெள்ளிக்கவசம் அமைப்பதற்கு விழாக்குழு, அறங்காவலர் குழு மற்றும் உபயதாரர்கள் ஆகியோரால் ஆலோசனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, எம்எல்ஏ மு.பெ.கிரி சார்பில் 10 கிலோ வெள்ளியும், உபயதாரர் சார்பில் 6 கிலோ வெள்ளியும் என 16 கிலோ வெள்ளியானது கோயில் அதிகாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, ரூ.16 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கு பூஜை செய்து கும்பகோணம் ஸ்தபதியிடம் கவசம் செய்வதற்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன், தாசில்தார் முருகன், அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், திருப்பணி குழு தலைவர் கஜேந்திரன், நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், அறங்காவலர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார், தமிழ்நாடு பாவபிரசார் மாநில தலைவர் பாண்டுரங்கன், தொழிலதிபர்கள் வெங்கடேஸ்வரா, பாபு, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் வெங்கடாஜலபதி, சம்பத், முரளிதரன், கிருத்திகா பாபு, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் சேட்டு, சேர்மராஜா, ஒப்பந்ததாரர் சுரேஷ் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.