செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி தணிகாவிற்கு அக்.20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாமண்டூரில் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது ரவுடி தணிகாவை சுட்டுப் பிடித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைத்த தணிகாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறது.