செங்கல்பட்டு: பொத்தேரி அருகே தனியார் கல்லூரியைச் சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் 4 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தினர். மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த ஒரு பெண் உள்பட 32 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதிகளில் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில் உள்ளிட்டவை சிக்கின.