செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்திருந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய சேர்மேன்-இடம் வளர்ச்சிகாக மேற்கொள்ளபட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளின் வருகை பதிவேடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வாகனம் மூலமாக செங்கல்பட்டு நோக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலைமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு மக்கள் புகார் மனுகளை அளிக்க வந்திருந்தனர். அவர்களது புகார் மனுக்களை நேரில் பெற்ற முதல்வர், புகார்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துவருகிறார்.