பணி: Technical Assistant
i) Engineering Services (CHEM-01): 8 இடங்கள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம்.
ii) Engineering Services (ELEC-02): 1 இடம். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ 60% மதிப்பெண்களுடன் 2 வருட பணி அனுபவம்.
iii) Engineering Services (MECH-03): 5 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம்.
iv) Engineering Services (CIVIL-04): 2 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
v) Biology: 1 இடம். தகுதி: Life Science பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
vi) Chemistry: 1 இடம். தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
vii) Computer Science: 2 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம்.
viii) Management Service: 1 இடம். தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
ix) Information Management Services: 1 இடம். தகுதி: இன்ஜினியரிங்/டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
x) Information Management Services: 1 இடம். தகுதி: அறிவியல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள். சம்பளம்: ரூ.70,290/-.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, டிரேட் தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினர் ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://www.iict.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2025.