Wednesday, December 4, 2024
Home » செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

by Ranjith

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் தற்போது 19.02 அடி உயரமும், நீர் வரத்து மணிக்கு 4764 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2368 மில்லியன் கன அடி நீரும் உள்ளது. அதே சமயம் ஏரியில் இருந்து 134 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும் போது பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்படுவது வழக்கம். மழை நீர் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் என்று இரண்டும் ஒரு சேர தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து இரவு பகலாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi