Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் மூன்றாவது ஷட்டர் பகுதியில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக, அப்பகுதி மக்கள் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கும், குன்றத்தூர் போலீசாருக்கும் நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ஏரியில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவராகவே தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கால் தவறி ஏரியில் விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்து உடலை மட்டும் ஏரியில் வீசிச் சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.