சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா, மருத்துவமனை, மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து வருவதாக நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. ச்செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
0