கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தில் மது விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட ஊராட்சி எனவும் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றச் செயலாகும் என ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோர் இணைந்து அந்த கிராமத்தில் விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ச.செல்லம்பட்டு ஊராட்சியில் மது விற்பனை செய்ய தடை ஊராட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
0