Friday, July 19, 2024
Home » 11 மணிநேரம் அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: திருப்பத்தூரில் விடியவிடிய பரபரப்பு

11 மணிநேரம் அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: திருப்பத்தூரில் விடியவிடிய பரபரப்பு

by MuthuKumar

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை இன்று அதிகாலை 3மணியளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தியவுடன் வீட்டின் கழிவறையில் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் மேரி இமாகுலேட் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளிக்குள் திடீரென ஒரு சிறுத்தை புகுந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அப்போது பள்ளியின் நுழைவு வாயிலில் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த புத்தரம் பகுதியைச் சேர்ந்த வேலு (47) என்பவரை சிறுத்தை தாக்கிவிட்டு தப்பியது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த சிறுத்தை சாலை வழியாகவே திருப்பத்தூர் ரயில்வே நிலையம் வழியாக சென்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் கார் ெஷட்டினுள் சென்று பதுங்கியது. அப்போது கார் ஷெட்டில் இருந்து காரை எடுக்க முயன்ற 4 பேர் சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து காரில் ஏறி கதவை மூடிக்கொண்டனர். தொடர்ந்து அந்த காருடன் ஷெட்டில் வைத்து சிறுத்தையை வெளியே செல்ல முடியாத வகையில் அங்கிருந்தவர்கள் கதவை இழுத்து மூடினர். சிறுத்தை புகுந்துள்ள ஷெட்டில் காருக்குள் 4 பேரும் தவித்தபடி இருந்தனர்.

இதற்கிடையில் தகவலறிந்த திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி ஆல்பர்ட் ஜான், வனச்சரகர் சோழராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையை பிடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க ஒசூரில் உள்ள மருத்துவக்குழுவினரை திருப்பத்தூருக்கு வரவழைத்தனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க வலை, கூண்டு போன்ற பொருட்களுடன் தயார் நிலையில் வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஷெட்டில் இருந்த காரில் சிக்கியிருக்கும் 4பேர், திருப்பத்தூர் டவுன் பகுதியை சேர்ந்த தீனா, பாஸ்கர், ஆஸ்கர், வாட்ச்மேன் ஆரோக்கியதாஸ் என தெரிந்தது. இரவு 9மணியளவில் அவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘சிறுத்தை காரின் அருகே உள்ள ஷோபாவில் படுத்துள்ளதாகவும், இதனால் அனைவரும் காருக்குள் உள்ளதாகவும், குடிக்க தண்ணீர் கூட இல்லை. இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் பீதியில் உள்ளோம். காரில் காற்ேறாட்டம் இல்லாததால் ஏசியை போட்டு பயன்படுத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் மயக்கவியல் நிபுணர் சுகுமார் தலைமையில் 10 ேபர் கொண்ட குழுவினர் கூண்டு, துப்பாக்கி, மயக்க ஊசி உட்பட உபகரணங்களுடன் சிறுத்தை பதுங்கியிருக்கும் கார் ெஷட் பகுதிக்கு வந்தனர். பின்னர் கார் ஷெட்டின் இரும்பு தகடுகளை அகற்றிவிட்டு இரவு 10 மணியளவில் ஒரு குழுவினர் ஏணி மூலம் உள்ளே ெசன்றனர். காரில் சிக்கியிருந்த 4பேரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் மயக்கவியல் நிபுணர் சுகுமார் தலைமையில் 2 குழுவினர் மீண்டும் ஏணி மூலம் கார் ஷெட்டுக்குள் இறங்கி அங்கிருந்த காருக்குள் சென்று சிறுத்தையை நோட்டமிட்டனர். ஷெட்டிற்கு ெவளியே மேற்கூரை அகற்றப்பட்ட பகுதியில் வலைகளை வைத்துக்கொண்டு வனத்துறையினர் பாதுகாப்பாக நின்றுக்கொண்டிருந்தனர்.

ெஷட்டில் சுமார் 2 மணிநேரம் காரில் இருந்தபடியே அக்குழுவினர், சிறுத்தை எங்குஉள்ளது என நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சிறுத்தை காருக்கு அடியில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி படுத்துக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். தலைமீது மயக்க ஊசி ெசலுத்தினால் சிறுத்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சிறுத்தை வெளியே வரும் என காத்திருந்தனர். காரை இயக்கியும், காரின் விளக்குகளை எரியவிட்டும் சிறுத்தை அசையவில்லை.

இதனால் அதிகாலை சுமார் 3 மணியளவில் மயக்கவியல் நிபுணர் சுகுமார் காரில் இருந்து கீழே இறங்கி தரையில் பதுங்கியபடி சென்று சிறுத்தையின் தொடை பகுதியில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினார். ஊசி செலுத்தப்பட்டதும் ஆவேசம் அடைந்த சிறுத்தை அசுர வேகத்தில் இரும்பு மேற்கூரை அகற்றப்பட்ட 10அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்தது. அப்போது சுவரின் மீது வலையுடன் காத்திருந்த வனத்துறையினரையும் தாக்க முயன்றது. ஆனால் வலையில் சிக்காமல் சிறுத்தை கீழே விழுந்தது. பின்னர் மீண்டும் சிறுத்தை மேலே சீறி பாய்ந்தது. அப்போது வலையில் சிக்காமல் அருகில் உள்ள வீட்டின் கழிவறையில் புகுந்தது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே சிறுத்தை மயங்கி விழுந்தது. இதையடுத்து சிறுத்தையை மீட்டு கூண்டில் அடைத்தனர்.

பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுடன் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டுசென்றனர். அங்கு கூண்டை திறந்தவுடன் சீறிப்பாய்ந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. நேற்று மாலை சுமார் 4 மணியில் இருந்து பொதுமக்களை அச்சுறுத்தி போக்குகாட்டிய சிறுத்தை 11 நேர போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3மணிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் விடியவிடிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi