Wednesday, April 24, 2024
Home » பெண்களை ஏமாற்றி ஓட்டு கேட்கும் மோடி; தமிழகத்தில் பாஜ என்னும் விஷம் பரவ விடாமல் தடுக்க வேண்டும்: மகிளா காங். தேசிய தலைவர் கடும் தாக்கு

பெண்களை ஏமாற்றி ஓட்டு கேட்கும் மோடி; தமிழகத்தில் பாஜ என்னும் விஷம் பரவ விடாமல் தடுக்க வேண்டும்: மகிளா காங். தேசிய தலைவர் கடும் தாக்கு

by MuthuKumar

மகிளா காங்கிரஸ் தேசிய தலைவர் அல்கா லம்பா நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கான நீதி கேட்டு மாநாடு நடத்தப்பட உள்ளது. 2024ல் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பெரிய மாற்றம் வர இருக்கிறது. இந்த தேசத்தில் இரட்டை இன்ஜின் அரசு செயல் இழந்த நிலையில் உள்ளது. வட மாநிலங்களை ஏமாற்றிவிட்டு பிரதமர் தென் மாநிலங்களில் குறி வைத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை கொண்டு வருவோம் என்று பாஜவினர் கூறுகிறார்கள். தென்னகத்தில் அவர்களையே அவர்கள் இழந்து இருக்கிறார்கள். பிரதமர் பெண்களை ஏமாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை அவர் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். ஆனால் அது நிறைவேற்றப்பட வில்லை. பிரதமர் 33 சதவீத இட ஒதுக்கீட்டை இப்போது நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த தேர்தலில் 150 பெண்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருப்பார்கள். 2024 ல் காங்கிரஸ் ஆட்சி மலரும்போது பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம்.

2026 ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் பெண்கள் காலடி எடுத்து வைக்க இந்த சட்டம் உறுதுணையாக இருக்கும். பாஜ, ஆர்.எஸ்.எஸ் தனது கொள்கைகளை தமிழக மக்களிடம் திணிக்க குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 400 இடங்களை பிடிப்போம் 2024 ஜெயிப்போம் என்று கூறுகின்ற பாஜ எதிர்க்கட்சிகளை பார்த்து ஏன் பயப்படுகிறது. அவர்கள் இந்தியா கூட்டணியை பார்த்து பயந்துள்ளார்கள். அதனால் சிபிஐ, அமலாக்க துறையை பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தை போன்று தெலுங்கானாவை போன்று ஆந்திராவைப் போன்று வரும் 2024 தேர்தலில் கண்டிப்பாக பாஜ என்னும் ஒரு விஷம் தமிழகத்தில் பரவ விடாமல் நீங்கள் அனைவரும் தடுத்திட வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

ten + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi