நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் குழந்தையின்மை காரணமாக மன உளைச்சலால் உயர்மின் அழுத்தமின் கம்பியைப் பிடித்து தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. குமரேசன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி(28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் ஏதும் இல்லை.
இந்நிலையில் இத்தம்பதி வீட்டின் மொட்டை மாடியின் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில், மின்சாரம் தாக்கி இன்று காலை நிகழ்விடத்திலேயே சடலங்களாக கிடந்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த காரியாப்பட்டினம் போலீசார் இருவரது உடலைமீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.