சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் விரைவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை காலம் முடிந்ததும் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது. பயன்பாடு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து இது மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.