கோவை ஜூலை 19: போலீஸ் உயர் அதிகாரி, பெண் போலீசார் குறித்து விமர்சனம் செய்து ஆட்சேபகரமான வீடியோ பதிவு வெளியிட்டது தொடர்பாக யூ டியூபர் சங்கர், யூ டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். வழக்கு விசாரணைக்காக சென்னை சிறையில் இருந்து இருவரும் நேற்று கோவை ஜேஎம் எண் 4 கோர்ட்டில் நீதிபதி சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு 55 பக்க குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக கேள்விகள் கேட்க அவர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இருவரும் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.