சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.440 குறைந்தது. தங்கம் விலை கடந்த 14ம் தேதி ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. பிறகு விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.8,930க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.71,440 ஆகவும் விற்பனையானது.
வார இறுதி நாளில் மாற்றம் தங்கம் பவுனுக்கு ரூ.440 குறைந்தது
0