பெங்களுர்: சந்திரயான்-3 திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.