திருமலை: திருப்பதியில் ‘உண்மை வெல்லும்’ பஸ் யாத்திரையை சந்திரபாபுவின் மனைவி புவனேஷ்வரி தொடங்கினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு மனைவி புவனேஷ்வரி ‘உண்மை வெல்லும்’ என்ற பெயரில் பஸ் யாத்திரையை நேற்று திருப்பதியில் தொடங்கினார். சந்திரபாபு கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து நிதியுதவி அளித்தார். முன்னதாக திருப்பதி அடுத்த நாராவாரிப்பள்ளியில் தனது வீட்டின் முன்பு உள்ள தனது தந்தையும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.