திருமலை: தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சந்திரபாபுவை கைது செய்து ராஜமகேந்திரவரம் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது.
இதற்காக இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபுவுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததும், தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், திறன் மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில் சந்திரபாபு, தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி டி.மல்லிகார்ஜூன் ராவ் நேற்று சந்திரபாபுவுக்கு ஜாமீன் வழங்கி னார்.