தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.