தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, தென்காசி, தேனி, குமரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.