Thursday, February 29, 2024
Home » பிப்.1, 2 தேதி மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

பிப்.1, 2 தேதி மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

by Ranjith


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஜன.30, 31 ஆகிய தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடதமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். பிப்.1, 2 ஆகிய நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi