Friday, June 14, 2024
Home » தமிழகம் முழுவதும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு;வங்கக்கடலில் உருவானது ‘ரெமல்’ புயல்: இன்று நள்ளிரவு கரையை கடக்கும்

தமிழகம் முழுவதும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு;வங்கக்கடலில் உருவானது ‘ரெமல்’ புயல்: இன்று நள்ளிரவு கரையை கடக்கும்

by Ranjith

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு புயலாக வலுப்பெற்றது. இதனால், தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அதேநேரம் வெயிலும் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரித்தது.

அதன்படி இது வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்க தேச கேப்புப்பாராவிலிருந்து சுமார் 440 கி.மீட்டர் தூரத்திலும், மேற்கு வங்காளம்- சாகர் ஐலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக நேற்றிரவு வலுப்பெற்றது. இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று இன்று நள்ளிரவு வங்க தேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையில் சாகர்தீவு அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது, தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக, இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை வெப்பநிலையும் படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi