லாகூர்: சாம்பியன்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. செதிகுல்லா அடல் 85, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 67 ரன் குவித்தனர். ஆஸியின் பென் துவார்சுயிஸ் 3, ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 274 ரன் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. துவக்க வீரர் மாத்யூ ஷார்ட் 20ல் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 59, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 19 ரன் எடுத்து அவுட்டாகாமல் ஆடிக்கொண்டிருந்தனர். 12.5 ஓவரில் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி தொடர்வதில் இடையூறு ஏற்பட்டது.


