உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 பயிலும் மாணவ – மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல் அனைவரையும் வரவேற்றார். இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு, 119 மாணவ – மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி சுந்தரி, பக்தவச்சலம், பாபு, முரளி, விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.