கொழும்பு: இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இந்திய இழுவைக் கப்பல் பணியாளர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்திய இழுவைக் கப்பல் பணியாளர்கள் 9 பேரை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்தது. நேற்று இன்ஜின் பழுது காரணமாக இழுவைக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. கப்பலை மீட்கும் வரை பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியே வரவேண்டாம் என்று இந்திய துணை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.