டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் CERT யின் விசாரணை தொடங்கியது. செல்போன் ஒட்டுக்கேட்பு புகாரில் இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் விசாரணையை தொடங்கியது. காங்.தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வேணுகோபால், சசிதரூர் ஆகியோர் செல்போன்களை உளவு பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. புகார் தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.