துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பெண் ஹாக்கி வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்- விளையாட்டு ஒதுக்கீடு-2025, ஹாக்கி). மொத்த காலியிடங்கள்: 30.
சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100.
வயது: 01.08.2025 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹாக்கி விளையாட்டில் மாநில/தேசிய/சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும். தற்போதும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். 2023ம் ஆண்டு ஜன.1க்கும் 2025ம் ஆண்டு மே 30க்கும் இடையில் உள்ள காலக்கட்டத்தில் செய்த விளையாட்டுத்துறை சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 153 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரின் விளையாட்டு தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பதாரர்கள் விளையாட்டுத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவர்கள் இதர தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்.
www.cisfrectt.cisf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2025.