Specialist Officer (Scale-I &II): மொத்த காலியிடங்கள்: 174
1. IT OFFICER: 88 இடங்கள். தகுதி: CSC/IT/ECE ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் அல்லது எம்சிஏ பட்டம்.
2. Law Officer: 15 இடங்கள். தகுதி: எல்எல்பி அல்லது பிஎல் பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 3 வருடம் வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 33க்குள்.
3. Credit Officer: 50 இடங்கள். தகுதி: எம்பிஏ நிதி படிப்பை முடித்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Financial Analyst- 14 இடங்கள். தகுதி: சிஏ/எம்பிஏ (நிதி) பட்டம் பெற்று வங்கிகள்/நிதி நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 33க்குள்.
5. Security Officer: 15 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் முப்படைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தது 5 வருடங்கள் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிந்திருப்பது விரும்பத்தக்கது.
6. Risk Manager: 2 இடங்கள். தகுதி: எம்பிஏ பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் வங்கி மற்றும் நிதி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும் மற்றும் 2 வருட பணி அனுபவம். வயது: 30க்குள்.
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு டிசம்பர் 3வது வாரம் நடைபெறும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ₹850/- (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹175). கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2023.