புதுடெல்லி: கிழக்கு டெல்லியின் சஹகர்பூர் பகுதியை சேர்ந்தவர் சச்சின்(16). நேற்று முன்தினம் சச்சின் புதிய செல்போனை வாங்கியுள்ளார். இதனை தனது நண்பர்களிடம் காட்டியதாக தெரிகிறது. அப்போது அவர்கள் புது செல்போன் வாங்கியதற்காக தங்களுக்கு ட்ரீட் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு சச்சின் மறுத்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் சச்சினை கத்தியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிந்தான்.
Advertisement


