நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு பஸ் 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சக்திவேல் ஓட்டிச்சென்றார்பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் சக்திவேல் செல்போனை பார்த்தபடி கவனக்குறைவாக பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.
இதை பயணி ஒருவர்,செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதையடுத்து டிரைவர் சக்திவேலை சஸ்பெண்ட் செயது அரசு போக்குவரத்து கழக நாகப்பட்டினம் மண்டல பொது மேலாளார் ராஜா, நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.