டெய்ர் அல் பலாஹ்: காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், “காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. காசாவில் அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வரும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
காசாவின் பல்வேறு இடங்களில் வௌ்ளிக்கிழமை பிற்பகல் முதல் நேற்று காலை வரை தாக்குதல் நடத்தப்பட்டது. காசா நகரின் பாலஸ்தீன மைதானத்தில் தங்கி இருந்த அகதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேரும், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 8 பேரும் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவின் முவாசியில் உள்ள முகாம்கள் மீது நடந்த தாக்குதலில் ஆறு பேர் பலியாகினர். இதேபோல் காசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 62 பேர் கொல்லப்பட்டனர்.