இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வியாழனன்று சவுதி அரேபியாவிற்கு சென்றார். பிரதமருடன் வெளியுறவு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக்குழுவும் சவுதி சென்றுள்ளது. நேற்று முன்தினம் சவுதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை ெமக்காவில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்தார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்த உதவியதற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தார். இதனை அவரும் ஏற்றுக்கொண்டார்.
போர் நிறுத்தம் சவுதி இளவரசருக்கு பாக். பிரதமர் நன்றி
0