மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிஇ04 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம். இதில் 8.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 130 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டருடன் வழங்கப்படும் 2.3 கிலோவாட் அவர் சார்ஜர் மூலம், 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்யலாம். இதில், இந்தியச் சந்தையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட அதிக சக்தி வாய்ந்த லிக்விட் கூல்டு, பர்மனண்ட் சிங்க்ரோனஸ் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 42 எச்பி பவரையும், 62 எம்என் டார்க்கையும் வெளிப்படுத்தும். 2.6 நொடிகளில் 50 கி.மீ வேகத்தை எட்டும். எக்கோ, ரெயின், ரோடு என 3 டிரைவிங் மோட்கள் உள்ளன. புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய 10.25 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளிட் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை ரூ.14.9 லட்சம்.
சிஇ04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
122
previous post