சென்னை: சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.6.5 கோடிக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தார்.