புதுடெல்லி: ஜார்க்கண்டை சேர்ந்த 2015ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆர். ராம் குமார், கர்நாடகாவை சேர்ந்த 2016 ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் ஆன கிருஷ்ணகாந்த் ஆகியோர் சிபிஐயில் எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை ஒன்றிய அரசு அளித்துள்ளது. இரண்டு அதிகாரிகளும் 5 ஆண்டுகளுக்கு பதவியை வகிப்பார்கள் என ஒன்றிய அரசு பணியாளர் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.