புதுடெல்லி: மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நாடு முழுவதும் சிபிஐ மூலமாக விசாரணை நடத்தப்பட்ட வழக்குகளில் சுமார் 6903 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இவற்றில் 1379 வழக்குகள் 3 ஆண்டுக்கும் குறைவானவை. 875 வழக்குகள் மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகின்றது. 2188 வழக்குகளின் விசாரணை 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை நிலுவையில் உள்ளன. 658 ஊழல் வழக்குகளில் 48 வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து வருகின்றது. 2100 வழக்குகளின் விசாரணை பத்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை நிலுவையில் இருந்து வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.