திருவொற்றியூர்: ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம், ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்றிய அரசு நிறுவனமான மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை, நிர்வாக இயக்குனர் எச்.சங்கர் தலைமையில், இயக்குனர்கள் ரோகித்குமார் அகரவாலா, பி.கண்ணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது பிளாஸ்டிக் ஒழித்தல், சிபிசிஎல் தொழில்நுட்ப கல்லூரியில் வண்ணத்து பூச்சி பூங்கா, லாரி ஓட்டுனர்களுக்கு தூய்மையான சீருடை மற்றும் வடசென்னையில் உள்ள பல பள்ளிகளில் தூய்மையை வலியுறுத்தி பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது, விழிப்புணர்வு ஓவியங்களை தீட்டுதல், எண்ணூர் கடற்கரையில் தூய்மை பணி மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் தூய்மை பணிகளை தொடர்ந்து 15 நாட்களும் நடத்தப்படும், என நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.