சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் நீர் திறப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருவது கண்டனத்துக்குரியது. வறட்சிக் காலத்தில் நீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் தெளிவான உத்தரவை அளித்துள்ளது என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.