டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடக அரசின் சார்பில் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியது இல்லை. காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் கர்நாடக அரசு அமல்படுத்தி வருகிறது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.