டெல்லி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. போதிய நீர் இல்லாததால் உத்தரவின்படி தற்போது தண்ணீர் திறக்க இயலாது என மனுவில் குறிப்பிட்டுள்ளது.